சேலம் மாநக ராட்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், அரசு கட்ட டங்களின் மேற் கூரைகளில் சோலார் பேனல்கள் பொருத்தி, அதன்மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் கொண்டுவரப் பட்டது. 

Advertisment

இதற்காக, 2.69 கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இத் திட்டத்திற்கான டெண்டர் படிவங்கள் 3.1.2019 முதல் 6.2.2019 வரை பெறப்பட் டன. டெண்டரில் கலந்து கொண்ட நிறுவனங்களில், 2.41 கோடி ரூபாய் குறைந்தபட்ச விலைப் புள்ளி குறிப்பிட்டிருந்த, சேலம் நெத்திமேட்டைச் சேர்ந்த டெல்டா ரோட் டோ டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட் டது.  

Advertisment

இதையடுத்து, சேலம் மாநகராட்சியின் சூரமங்க லம் மண்டலத்திற்குட்பட்ட 16 அரசுக் கட்டடங்களின் மேற்கூரைகளில் 52.26 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டன. அஸ்தம்பட்டி, மண்டலத்தில் 19 கட்டடங்களில் 208.66 கி.வா., அம்மா பேட்டை மண்டலத் தில் 23 கட்டடங்களில் 152.61 கி.வா., கொண்ட லாம்பட்டி மண்டலத்தில் 11 கட்டடங் களில் 57.71 கி.வா., மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு டெல்டா ரோட்டோ டெக் நிறுவனம் சோலார் பேனல் கிரிட்டுகளைப் பொருத்தியது. மொத் தம் 69 கட்டடங்களின் மேற்கூரை களில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டன. 

ரூப்டாப் சோலார் புரா ஜெக்ட் தொடங்கி ஐந்தாண்டு கள் முடிவுற்ற நிலையில், தற்போதைய நிலவரம் குறித்து, நக்கீரன் நடத்திய நேரடி கள விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.  

Advertisment

சேலம் பொன்னம்மா பேட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், வாய்க்கால் பட்டறை ஆரம்ப சுகாதார நிலையம், மணக்காடு மகளிர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகிய கட்டடங் களில் ஆய்வுசெய்தபோது, சோலார் பேனல்கள் பெயரளவுக்கு தரையில் கிடத்தப்பட்டிருந்ததே தவிர, அதற்கான மீட்டர், மின்சார உற்பத்திக்கான இணைப்புகள் வழங்கப் படாமல் பயனற்றுக் கிடப்பது தெரியவந்தது. 

salemcorporation1

மணக்காடு தொடக்கப்பள்ளி, மணக்காடு சமுதாயக்கூடம், பாவடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி கட்டடங்களில் பொருத்தப்பட்ட சோலார் பேனல்கள் திருடு போய்விட்டதாக 8.11.2022-ஆம் தேதியும், பாவடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டடத்தில் பொருத்தப்பட்ட சோலார் பேனல்கள் சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டதோடு, மின் இணைப்புக் கம்பிகள் திருடப்பட்டதாக 21.7.2020-ஆம் தேதியும் மாநகராட்சி மற்றும் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இங்கு புதிதாக சோலார் பேனல்கள் பொருத்தவோ, புகாரின்மீது யாதொரு நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை. 

சேலம் மிட்டாபுதூர் நடுநிலைப்பள்ளியில் கடந்த 2023-ஆம் ஆண்டு கட்டுமானம் மற்றும் மின்கசிவு காரணமாக எலக்ட்ரிகல் பணிகளுக்காக கழற்றப்பட்ட பேனல்கள்  இன்றுவரை கேட்பாரற்றுக் கிடக்கின்றன. 

அழகாபுரம் புதூர் தொடக்கப்பள்ளி, அல்லிக்குட்டை நடுநிலைப்பள்ளிகளில் கூடுதல் கட்டடம் கட்டும் பணிகள் நடந்தபோது சோலார் பேனல்கள் கழற்றப்பட்டுவிட்டன. அதன்பிறகு அங்கு மீண்டும் பேனல்கள் பொருத்தப்படாததால் மின்னுற்பத்தி முடங்கியது தெரியவந்தது. 

சோலார் பேனல்களுக்கான இன்வெர்ட்டர் துண்டிக்கப்பட்டது, தீக்கிரையானது, திருடு போனது, கட்டுமானப் பணிகளால் பேனல்கள் பிரிக்கப்பட்டது என 41 கட்டடங்களில் கடந்த 3 ஆண்டு களுக்கு மேலாகவே மின்னுற்பத்திப் பணிகள் நடைபெறவில்லை. 

salemcorporation2

சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தாதகாப்பட்டி சிவராமன் ஆர்.டி.ஐ.யில் பெற்ற தகவலில், மேற்கூரைகளில் சோலார் பேனல்கள் நிறுவியதன் மூலம் கடந்த 2024 ஆகஸ்ட் வரை 2.14 லட்சம் கிலோவாட் ஹவர் மின்சாரம் உற்பத்தி செய்யப் பட்டதாக மாநகராட் சித் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதேநேரம், ராம் நகர் தொடக்கப் பள்ளி கட்டடத்தில் சோலார் பேனல் பொருத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தகவலளித்துள்ளது. ஆனால் அங்கு பள்ளிக்   கூடமே இல்லை. அம்மாபேட்டை அண்ணா மருத்துவமனை, அஸ்தம்பட்டி மண்டல அலுவலகக் கட்டடங்களில் சோலார் பேனல்கள் பொருத்தப்படாமலேயே, பொருத்தப்பட்டதாக பொய்யான தகவலை ஆர்.டி.ஐ.யில் தெரிவித் துள்ளது. 

இதுதொடர்பாக, ரூப்டாப் சோலார் புராஜெக்டை ஒப்பந்தமெடுத்த டெல்டா ரோட்டோ டெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுப்ரமணியிடம் அலைபேசி வழியாக தொடர்புகொண்டு கேட்டோம். ''எங்களுக்கு ஒப்பந்தத்தில் என்ன சொல்லப்பட்டதோ அந்தப் பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டோம். உண்மையில், 10 சதவீத 'பில்' தொகையை மாநகராட்சி பாக்கி வைத்திருக்கிறது. நிலுவைத் தொகையைக் கேட்டு மாநகராட்சிக்குக் கடிதமெழுதி இருக்கிறோம்'' என்றார் சுப்ரமணி. 

salemcorporation3

ரூப்டாப் சோலார் புராஜெக்ட் மூலம் ஆண்டுக்கு 60 லட்ச ரூபாய் மின்கட்டணம் சேமிக்கப்படுமென்று சேலம் மாநகராட்சி தரப்பு கூறியிருந்தது. மாநகராட்சியின் அலட்சியம், மெத்தனப் போக்கால் மக்கள் வரிப்பணம் 2.41 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது நமது கள ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இதுதொடர்பாக சேலம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவனிடம் அலைபேசி வழி தொடர்புகொண்டு கேட்டபோது, "இதுபற்றி விசாரித்துச் சொல்கிறேன்,'' என்றார். அதன்பிறகு தொடர்புகொண்ட போது, "வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் முடிந்தபிறகு பேசுகிறேன்' என்றார். பின்னர், மாநகராட்சியின் அலட்சியத்தால் மக்கள் பணம் விரயமாக்கப்பட்டது குறித்து விரிவாக அவருக்கு மெசேஜ் செய்திருந்தோம். அதன் பிறகும் அவரிடமிருந்து பதிலேதும் வரவில்லை.